தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் – தமிழக நிதியமைச்சர்

தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும் என தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. சபாநாயகர் அப்பாவு தலைமையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், நிதியாண்டின், எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசின் நிதிநிலையை சீர்படுத்துவோம் என்று மக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிக கடுமையாக உள்ளது. எனவே, நிதிநிலை சிக்கலை செய்து முடிக்க 2,3 ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.