மழைக்காலங்களில் மக்களிடம் நல்லபெயர் எடுப்பது மிகவும் சிரமம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதல்வர் பேச்சு. 

மழைக்காலங்களில் அயராது உழைத்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

cm stalin rpd2023

 அப்போது பேசிய அவர் மழை வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் நான் உரையாற்றுகிறேன். மழையோ, வெள்ளமோ ஏற்படும் முன் தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்துவோம் என்று உறுதி ஏற்று மிகப்பெரிய சாதனையை அரசு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மழை, இந்த மழையை ஒப்பிட்டு பார்த்தால், சமூக வலைதளங்களில் மக்கள் அரசை பாராட்டியுள்ளனர். ஆனால் அரசு பாராட்டு மழையில் நனைவதற்கு மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தான் காரணம். அமைச்சர்கள், மேயர் அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் பணியாற்றினர்.

மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது மிகவும் சிரமம். மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment