,

தளபதி 67 படத்தில் இணைந்த கேஜிஎஃப் அதீரா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

By

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 67 -வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை  7 ஸ்க்ரீன் நிறுவனம்  தயாரிக்கிறது. தற்காலிமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

   
   
Thalapathy67 Update
Thalapathy67 Update [Image Source : Twitter]

மேலும், ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில், நேற்று படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘தளபதி 67 ‘ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, கேஜிஎப் படத்தில் அதீரா எனும் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வாய்த்த சஞ்சய் தத் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

Thalapathy67
Thalapathy67 [Image Source : Twitter]
இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வேறு எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Dinasuvadu Media @2023