போட்டிக்கு நாள் குறித்தாலே அது வெற்றிக்கு நாள் குறித்து போலத்தான் : மு.க. ஸ்டாலின்

திமுகவை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே அது வெற்றிக்கு நாள் குறித்து போலத்தான் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாப்களின் அவர்கள் திருச்சியில், திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ” நாங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பவர்கள் என்றும், அதிமுக, பாஜக, பாமகவின் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், திருச்சி திமுகவின் எஃ கு கோட்டை என்றும், திமுகவை பொறுத்தவரை போட்டிக்கு நாள் குறித்தாலே, அது வெற்றிக்கு நாள் குறித்தது போல தான்” என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment