மணமகள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றது போல சந்திராயன் பூமியை விட்டு சென்றது!

கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.

இது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது.

இது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்  சந்திப்பில் பேசிய போது, ‘ இதுவரை திட்டமிட்டபடி வெற்றிகரமாக சந்திராயன் 2 விண்கலம் முன்னேறியுள்ளது. மணமகள் தன தாய் வீட்டில் இருந்து, மணமகன் வீட்டிற்கு சென்றது போல பூமியை விட்டு தற்போது நிலவின் சுற்று பாதையில் சுற்றி வருகிறது.  நாளை முதல் சில நாட்களுக்கு 4 முக்கிய மாற்றம்  நிகழும் எனவும் தெரிவித்தார்,

மேலும் செப்டம்பர் 7ஆம் தேதி, நள்ளிரவு 1.55 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரை இறங்க உள்ளது.என்றும் கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.