பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி இவர் தானா?

பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் தற்பொழுது வெற்றிகரமாக 32 ஆவது நாளாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. பல்வேறு அறிமுகமான முகங்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது வார முடிவிலேயே தொகுப்பாளினி அர்ச்சனா வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.

அதனை தொடர்ந்து சுஜித்ரா கடந்த வாரம் உள்ளே இரண்டாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். தற்பொழுது மூன்றாவது வைல்ட் கார்டு எண்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஷீம் அவர்கள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே  இவர் ஷிவானியுடன் இணைந்து வெற்றி தொடராகிய பகல் நிலவில் நடித்திருந்தார். எனவே இவர் உள்ளே சென்றால் அங்கு என்ன நடக்கும் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

author avatar
Rebekal