பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! கருத்துகேட்பு என்பது அதிமுக அரசின் நாடகம்! – மு.க.ஸ்டாலின்

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நவ.16-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளதாகவும், 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும்  என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பள்ளிகள் திறக்கப்படும் தேதி தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, பள்ளிகள் திறப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், அனைத்து பள்ளிகளிலும் நவ.9ம் தேதி நடததப்படும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக சொல்லி பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கவில்லை என்பதை காட்டுவதற்காக, தமிழக அரசு கருத்துகேட்பு நாடகத்தை நடத்துகிறது. இதை அறிவிக்கும் முன்பன்றோ செய்திருக்க வேண்டும். ஆந்திராவில் பள்ளிகள் திறப்பால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அரசுக்கு தெரியுமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.