நமது அன்றாட வாழ்வில்,நமது சமையலறைகளில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது சமையலில் காய்கறிகள் இல்லாத உணவே இருக்காது.

காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. தற்போது இந்த பதிவில் காளிஃபிளவரில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

Image result for காலிபிளவரை

காளிஃபிளவரில், மாவுசத்து, உயிர்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீசு, கரோட்டின், ஆண்டி ஆக்சிடென்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளது.

கண்பார்வை

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. இதற்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காண்பதை விட இயற்கையான முறையில் தீர்வு காண்பது மிகவும் நல்லது.

Image result for கண்பார்வை

கண்பார்வையில், பிரச்னை உள்ளவர்கள் தங்களது தொடர்ந்து காலிபிளவரை சேர்த்து வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும். ஏனென்றால் கண் பார்வைக்கு தேவையான கரோட்டின் சத்து இதில் அதிகமாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

Image result for நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, எந்த விதமான நோய்களும் எளிதில் டநம்மை பாதிக்கக் கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், தொடர்ந்து உணவில் இந்த பூவை சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதயக் கோளாறுகள்

இதயத்தில் கோளாறுகள் உள்ளவர்கள் இந்த பூவினை தங்களது உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் இதயத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி சுகம் பெறலாம்.

Image result for இதயக் கோளாறுகள்

இந்த பூவில் அல்லிசின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், இதயக்கோளாறுகள்மற்றும் பக்கவாதம்போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

புற்றுநோய்

காளிஃபிளவரில் புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாக்க கூடிய ஆற்றல் உள்ளது. காளிஃபிளவரில் அதிகமாக ஆண்டி ஆக்சிடென்டுகள் காணப்படுகிறது.

Related image

காலிபிளவரை தொடர்ந்து நமது உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில்  புற்றுநோய் உருவாகுவதை தடுத்து, புற்றுநோய் செல்களை அளிக்கிறது. இதில் உள்ள சல்பர் புற்று நோயை அடியோடு அழிக்கும் தன்மை கொண்டது.

நீரிழிவு

Image result for நீரிழிவு

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காலிபிளவர் ஒரு சிறந்த மருந்தாகும். இவர்கள் இந்த பூவை தொடர்ந்து தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயில் இருந்து விடுதலை அளிக்கிறது.

வயிற்று பிரச்சனைகள்

Related image

காளிஃபிளவரில் வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இந்த பூவில் நார்சத்து அதிகமாக உள்ளதால், இது வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான, அஜீரண கோளாறு, அல்சர், குடல் புற்றுநோய் போன்ற நோயகளை குணமாக்குகிறது.