ஓட்டு போடலான ரூ.350 அபராதமா..? – தேர்தல் ஆணையம் விளக்கம்..!

டெல்லியில் வாக்களிக்காததற்காக தேர்தல் ஆணையம் ரூ.350 அபராதம் விதிக்கப்படும் என்ற வைரலான போலிச் செய்தியைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.

சமீபகாலமாக சமூக ஊடகங்களில் வாக்களிக்காத மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.350 தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக செய்தி வைரலானது என்று டெல்லி காவல்துறை கூறியது. பின்னர், சமூக ஊடகங்களில் தேர்தல் ஆணையமே இந்த செய்தியை வதந்தி என்றும்  அத்தகைய அபராதம் எதுவும் பிடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது.

தேர்தல் ஆணையம் அபராதம் வசூலிக்கவில்லை என தெளிவுபடுத்திய போதிலும், வதந்தி நிற்கவில்லை, அதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விஷயத்தை Intelligence Fusion and Strategic Operations(IFSO) பிரிவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறை தெரிவித்தது.

author avatar
murugan