#BreakingNews : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக பிடிவாரண்ட் – ஈரான் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது ஈரான்.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே அமெரிக்க நடத்திய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர். இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்பட்டது.

எனவே ஈரான் அரசு சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பழி தீர்க்க உறுதியாக இருந்து வந்தது .ஈரான் நாடாளுமன்றத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை தீவிரவாத அமைப்பாக  மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது ஈரான்.டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய இன்டபோலின் உதவியை ஈரான் கோரியுள்ளது.