இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?

iQOO Z9 5G :  iQOO சீரிஸ் ஸ்மார்ட்போன் மொபைல்கள் மொபைல் வாசிகள் மத்தியில் அதற்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. iQOO ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் எல்லாம் மிகவும் கவரும் வண்ணம் அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும். குறிப்பாக iQOO ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும், சிறந்த கேமிங் அனுபவத்துக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். ஏற்கனவே, இந்தியாவில் iQOO Z9 5G மார்ச்-13ம் தேதி அறிமுகம் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது  iQOO Z9 5G இன்று அறிமுகமாகி இருக்கிறது.

Read More :- வெளியீடு தேதி உறுதி… பக்காவான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது Realme Narzo 70 Pro 5G!

 iQOO Z9 5G, இந்த ஸ்மார்ட் போனை  ₹20,000 பட்ஜெட் விலைக்கு சமீபத்தில் அறிமுகமான  Realme 12+ 5G , Samsung Galaxy F15 5G  போன்ற ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக களமிறக்கி உள்ளனர். iQOO Z9 5G போனை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். 8 GB RAM, 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போனின் விலை ₹19,999 மற்றும் 8 GB RAM , 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போனின் விலை ₹21,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனது அம்சத்தை பற்றி தற்போது பார்ப்போம். iQOO Z9 மொபைலானது 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட் , 1,800 nits  பிரைட்னெஸ் மற்றும் 300Hz தொடு திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OS-ல் வெளியாகியுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு- 16 அப்டேட் வரை செய்துகொள்ளலாம்.

Read More :- இனவெறியை தூண்டியதாக சர்ச்சை! மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் ஜெமினி AI இமேஜ் ஜெனரேட்டர்

iQOO Z9 ஸ்மார்ட்போனில் 50MP சோனி IMX882 முதன்மை கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் போன்றவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி வசதிகளுடன். நெட்வொர்க் 5G, 4G LTE, மற்றும் WI-Fi, புளூடூத், GPS, USB டைப்-சி போர்ட் ஆகிய அம்சங்களும் அடங்கும். மேலும், iQoo Z9 5Gயில்  டபுள் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகளும் உள்ளது.

இன்று வெளியாகி உள்ள இந்த iQOO Z9 5G போனானது Amazon India மற்றும் iQOO ஆகிய ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு வந்துள்ளது. இது இரண்டு வண்ண வகைகளில் வெளியாகி உள்ளது. அது பிரஷ்டு கிரீன் மற்றும் கிராபீன் ப்ளூ ஆகும். நீங்கள் ரூ.20,000 பட்ஜெட்டில் போன் தேடிக்கொண்டிருந்தால் உங்களுக்கான சிறப்பான போனாக இது இருக்கலாம்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment