இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்!

Hezbollah : லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

Read More – மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தாலும், இந்த போரில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பலர் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாராசூட் மூலம் காசா  மக்களுக்குஉணவு பொட்டலங்கள் வினியோகம் செய்தது.

Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

அப்போது, பாராசூட் செயல்படாமல் உணவு பொட்டலங்களுடன் மக்கள் மீது விழுந்ததில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரழந்தனர். இந்த நிலையில், லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Read More – 15 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து..! அனைவரும் உயிரிழந்ததாக தகவல்

இது கடந்த சில நாட்களில் மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த வான்வழித் தாக்குதல்களில் உணவுப் பொருட்களை சேமித்து வைத்திருந்த கிடங்கு ஒன்று அழிந்ததாக கூறப்படுகிறது.

லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய ராணுவ நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவும், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும், இஸ்ரேல் மீது இந்த சரமாரியான தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment