IPL 2018:ரஷித் கான் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறிய விராட் கோலி!

பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2018-ன் 51வது போட்டியில் ஆர்சிபி அணி 15 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், புவனேஷ்வர் குமார் இல்லை. பேசில் தம்பி அணிக்குள் வந்துள்ளார். யூசுப் பத்தானும் இல்லை, கோஸ்வாமி வந்துள்ளார். விராட் கோலி அணியில் மாற்றம் செய்யவில்லை.

முதல் பந்திலேயே சந்தீப் சர்மா பந்தில் பார்த்திவ் படேலுக்கு ஹூடா கவரில் கேட்சை விட்டார். ஆனால் அதே ஓவரில் பார்த்திவ் படேல் லெக் திசையில் பெரிய ஷாட்டை ஆடினார் ஆனால் லீடிங் எட்ஜ் எடுத்து தேர்ட்மேனில் கொடியேற்ற வேண்டியதாயிற்று அங்கு கவுல் கேட்ச் எடுத்தார் பார்த்திவ் 1 ரன்னில் வெளியேறினார்.

விராட் கோலி சந்தீப் சர்மாவை மிக அழகாக நேராக ஒரு பவுண்டரியும், ரஷீத் கான் வீசிய லெந்த்தை சட்டென புரிந்து கொண்டு பின்னால் சென்று மிட்விக்கெட்டில் பவுண்டரியும் விளாசினார், ஆனால் ரஷீத் கானின் இதே ஓவரில் அடுத்த பந்தில் அதிர்ச்சிகரமாக பவுல்டு ஆனார். பந்து கூக்ளியானது ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆனது கோலி அதனை லெக் திசையில் விளாச நினைத்தார், பந்து சிக்கவில்லை ஆஃப் அண்ட் மிடில் ஸ்டம்பை பந்து தொந்தரவு செய்தது. 12 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment