IPL 2018:நான் எப்பவுமே சாதாரண வீரரா இருக்க தான் ஆசை படுவேன்!கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை!தோனி அதிரடி கருத்து!

 சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி,கேப்டனா? அல்லது சாதாரண வீரரா… எதில் விருப்பம்? என்ற கேள்விக்கு தனது அனுபவமிக்க பதிலை அளித்திருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிராவோ, தோனி, ரெய்னா, வாட்சன், ஹார்பஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நேயர் ஒருவர் கேப்டனாக இருக்க விருப்பமா? அல்லது சாதாரண வீரராக இருக்க விருப்பமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி பதிலளித்ததாவது:

“ஒரு சாதாரண வீரனாக அணியில் தொடங்குவது மிக முக்கியம். அப்போதுதான் நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும், விளையாட்டையும் புரிந்து கொள்ள முடியும். உங்கள் முன்னேற்றங்களில் நிறைய கற்றுக் கொள்வீர்கள். உங்களது கேப்டனிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்வீர்கள்.

உங்களை எப்படி தயார்ப்படுத்தி கொள்வது மட்டுமல்லாமல், எப்படி தயார் படுத்திக் கொள்ள கூடாது என்றும் கற்று கொள்வீர்கள். எப்போது ஒரு சிறந்த கேப்டனால்தான் தன்னை சுற்றியுள்ள வீரர்களை புரிந்து கொள்ள முடியும். ஏனெனினில் நீங்கள் வீரரின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் ஆலோசனைகளை கூறி வழி நடத்த முடியாது.

என்னை பொறுத்தவரை ஒரு குழுவாகவும், தனிப்பட்ட நபராகவும் நீங்கள் எவ்வாறு சிறந்து இருக்கிறீர்களோ, அதுதான் பிறர்  நன்றாக விளையாடவும் உதவும்.

கேப்டனாக இருப்பதை காட்டிலும் தனிப்பட்ட வீரராக இருப்பது மிக முக்கியம்” என்றார்.

கோலி கேப்டன்சி குறித்து கேட்டபோது, “அவர் ஒரு சிறந்த கேப்டன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment