IPL 2018:கேப்டன் வார்னரை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்…!கிரிக்கெட் ஆடவில்லை என்பதால் அனுபவமின்மை என்று கூற முடியாது….!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்  புவனேஷ்வர் குமார்,  11-வது ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் கேப்டன் வார்னரை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஐபிஎல் வெற்றி வாய்ப்புகள் பற்றி பேசியுள்ளார்.

அதாவது தொடர் முழுதும் சில விஷயங்களை சரியாகச் செய்வது அவசியம் என்கிறார் புவனேஷ்வர் குமார்.

Image result for sunrisers hyderabad team 2018

“எங்கள் குறிக்கோள் சாம்பியன் ஆவதே, ஆனால் அது நிச்சயம் எளிதானத்ல்ல என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் அனைத்து அணிகளுமே சம அளவில் வலுவான அணிகளே. தொடர் முழுதும் சரியாக விளையாடி, எங்களைச் சாம்பியன்களாக்கிய சிறு சிறு விஷயங்கள் என்னவென்பதை பார்க்க வேண்டும்.

இந்தத் தொடருக்காக சிறப்பு யுக்திகள் எதுவும் வகுக்கவில்லை, ஆட்டத்துக்கு முதல் நாள் மாலை அணி வீரர்களுடன் சந்திப்பு உள்ளது. அணிக்குத் தக்கவாறு திட்டமிடவேண்டும். இன்னும் கால அவகாசம் உள்ளதால் இப்போதைக்கு அணியின் யுக்திகள் என்று எதுவும் திட்டமிடப்படவில்லை. ஆனால் நிச்சயம் திட்டமிடுவோம்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பெரிய வீரர்களின் பெயர்களினால் எப்போதும் வெற்றி வந்து சேர்வதில்லை, ரஷீத் கான் இருக்கிறார், சித்தார்த் கவுல் இருக்கிறார், இவர் கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டார். கடந்த தொடர்களில் சிறப்பாக வீசிய நல்ல பவுலர்கள் உள்ளனார். எனவே அனுபவம் இல்லை என்பதனால் எந்த வித கூடுதல் அழுத்தமும் இல்லை.

அனுபவமின்மை என்பது சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இன்மை என்பதல்ல. ஐபிஎல் பற்றி பேசினோமானால் சன் ரைசர்ஸ் அணியில் இதே லீகில் 4-5 ஆண்டுகள் ஆடி அனுபவம் பெற்றவர்கள் உள்ளனர், எனவே இதுவே போதியதற்கும் கூடுதலான அனுபவம், இதைக்கொண்டே கோப்பையை வெல்ல முடியும்.

இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதற்கான சரியான காரணங்களைக் கூறுவது கடினம், நம் உள்நாட்டு கிரிக்கெட் நடைமுறை நன்றாக உள்ளது. ஐபிஎல்-க்கும் இந்தப் பெருமையில் பங்குண்டு. இது குறுகிய வடிவமாக இருந்தாலும் உங்களுக்கு இது பல மட்டங்களில் சிறப்பாக அடக்கூடிய அனுபவத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது” என்றார் புவனேஷ்வர் குமார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment