பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.

கர்நாடக முதல்வர் யார் இழுபறி நீடித்து வந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார. அப்போது பேசிய அவர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

நாளை மறுநாள் மதியம் 12.30 மணிக்கு கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாயிருந்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சித்தராமையா தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்