30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

ஆஹா…நடிகை குஷ்பு வா இது..? வைரலாகும் பருவ புகைப்படம்.!!

நடிகை குஷ்பு நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எவ்வளவு அழகாகவும், இளமையாகவும் இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறார் என்று கூறலாம் . அந்த அளவிற்கு 52 வயது ஆகியும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார்.

Kushboo
Kushboo [Image Source : Twitter/@khushsundar]

ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோயினாக கலக்கி வந்த இவர் தற்போது படங்களில் குறிப்பிட்ட சில வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில்,  அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது, 13 , 14 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும்,  இப்போது 52 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் டிவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ” வயசானாலும் உங்க அழகும் உங்க ஸ்டைலும் உங்களை விட்டு போகவே இல்லை” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும்,கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.