31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

வித்தியாசமாக அரைசதம் கொண்டாடிய ப்ரித்வி ஷா… வைரலாகும் புகைப்படம்.!

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிவீரர் ப்ரித்வி ஷா, அரைசதம் அடித்து அதனை வித்யாசமான முறையில் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதின. இதில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என 54 ரன்கள் குவித்தார், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்த முதல் சிக்ஸரும் இதில் அடங்கும். ப்ரித்வி ஷா தனது 2023 ஐபிஎல் தொடரின்  முதல் அரைசதத்தை அடித்த பின்பு, டிரஸ்ஸிங் ரூமை நோக்கி ஒரு சைகை காண்பித்தவாறு கொண்டாடினார்.

ப்ரித்வி ஷா, தனது இரு கைவிரல்களையும் சேர்த்து வைத்தவாறு டிரஸ்ஸிங் ரூமை நோக்கி ஏதோ சைகை கூறினார். அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.<

Prithvi Shaw/p>