தொடரும் போராட்டம் – 2 நாட்களுக்கு நோ இன்டர்நெட்

  • குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 
  • 2 நாட்களுக்கு  இன்டர்நெட் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

குடியுரிமை சட்ட திருத்த மசோதாமக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில்  போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.இதன் விளைவாக அசாம் ,திரிபுரா,சிக்கிம்  உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் விளைவாக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் 2 நாட்களுக்கு  இன்டர்நெட் சேவை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகின்ற 16 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.வதந்திகள் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.