நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க மின்னல் வேகத்தில் இருக்கும்!!

Mobile Internet Speed Increase

Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது நெட் (Net) மிகவும் மெதுவாக இருப்பது பெரிய தலைவலியை கொடுக்கும். அப்படியான சூழ்நிலையில், நம்மளால் நமக்கு பிடித்ததை டவுன் லோட் செய்யவும் முடியாது. அதேபோல நமக்கு விருப்பப்பட்ட கேம்களையும் விளையாடவும் முடியாது. அப்படி நெட் யாருக்கெல்லாம் ரொம்பவே மெதுவாக இருக்கிறதோ அவர்களுக்காக நாங்கள் சூப்பர் ஸ்டிப்ஸ் கொண்டு வந்து … Read more

விவசாயிகள் போராட்டம்! ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மீண்டும் இணைய சேவை தொடக்கம்

விவசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவின் 7 மாவட்டங்களில் இணைய சேவையை அரசு முடக்கியிருந்த நிலையில் தற்போது அந்த 7 மாவட்டங்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த 13-ம் தேதி டெல்லி நோக்கி பேரணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, பேரணிக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே, அதாவது பிப்ரவரி 11ஆம் தேதி அம்பாலா, … Read more

மொபைல் இணையத் தடையை மணிப்பூர் அரசு நீக்க வேண்டும்.! உயர் நீதிமன்றம் உத்தரவு.!

Manipur High Court

மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலில் வசிக்கும் மைத்தேயி மற்றும் குக்கி ஆகிய இரண்டு பிரிவினர்கள் இடையே, கடந்த மே மாதம் முதல் நடந்த வன்முறையானது நாட்டையே உலுக்கியதோடு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்திற்கு மத்தியில் இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட இந்த கலவரத்தினால் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் 170க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த … Read more

மேகாலயாவில் 7 மாவட்டங்களில் இணையதள முடக்கம்…! மேலும் 48 மணிநேரத்திற்கு நீட்டிப்பு..!

மேகாலயாவில் 7 மாவட்டங்களில் மேலும் 48 மணி நேரம் இணையதள முடக்கம் நீட்டிப்பு.  கடந்த 22ஆம் தேதி, மேகாலயா மாநிலம், அசாம் எல்லையையொட்டிய உள்ள மேற்கு ஜெயந்தியா மாவட்டத்தில் மரம் கடத்துவதாக கூறி லாரி ஒன்றை அசாம் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு மக்கள் கூட்டம் குவிந்தது. இதனை எடுத்து அசாம் போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. … Read more

அக்னிபாத் வன்முறை – பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு…!

அக்னிபாத் வன்முறையை தொடர்ந்து, பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு.  இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான குறைந்தபட்சம் … Read more

ஜியோ வாடிக்கையாளர்களே..! இனிமேல் நீங்க ரூ.1-க்கு ரீசார்ஜ் பண்ணலாம்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மிகவும் மலிவான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை வழங்கும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் மாறியுள்ளது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தின்படி வெறும் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ்  … Read more

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு…!

செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும், 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும்  நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், தகுதிவாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு பாரத் … Read more

ஸ்மோட்டோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது..!

உலகம் முழுவதும் ஸ்மோட்டோ,டிஸ்னி+ஹாட்ஸ்டார், பிஎஸ்என், ஸ்டீம் உள்ளிட்ட முக்கிய இணைய சேவை முடங்கியது. உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு ஸ்மோட்டோ, பேடிஎம், டிஸ்னி ஹோஸ்டார், சோனி எல்ஐவி, பேடிஎம், பிளேஸ்டேஷன் நெட்வொர்க் (பிஎஸ்என்) மற்றும் ஸ்டீம்  உள்ளிட்ட இணைய சேவைகள் முடங்கியது. செயலிழப்புகள் பற்றி புகாரளிக்கத் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இணைய உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நிறுவனமான அகமாய் (Akamai) இணைய சேவை முடக்கத்தை உறுதிப்படுத்தியது. இதுப்பற்றி இணையத்தளங்களின் நிகழ்நேர தகவல்களை வழங்கும் … Read more

டெல்லி வன்முறை : இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு…!

இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கு, காசிப்பூர் மற்றும் திகிரி அவற்றின் அருகில் உள்ள எல்லைப் பகுதிகளில் இணைய சேவை ஜனவரி 31ஆம் தேதி இரவு 11 மணிவரை துண்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக … Read more