பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வசதி – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இண்டெர்நெட் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், தகுதிவாய்ந்த ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு பாரத் நெட்  மூலம் வழங்கப்படும் என்றும், 12,525 லிராமங்களுக்கு 1 ஜிபிஎஸ் அளவில் அலைவரிசை இணைப்பு கண்ணாடி இழைவடம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.