சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு..!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை ஒரு மாதம் நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கருத்தில் கொண்டு சர்வதேச பயணிகள் விமானம் கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு மே 2020 முதல் வந்தே பாரத் மிஷன் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சர்வதேச விமானங்கள் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த நிலையில், Omicron மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, அரசு மீண்டும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை செய்ய முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சர்வதேச அனைத்து சரக்கு விமானம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் 20-க்கும் நாடுகளில் பரவியுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு (WHO) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் Omicron “ரிஸ்க்” நாடுகளின் தற்போதைய பட்டியலில் ஐக்கிய இராச்சியம், ஐரோப்பாவின் பிற நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடங்கும்.

author avatar
murugan