சச்சினுக்கு “ஹால் ஆஃப் ஃபேம்” கெளரவம் வழங்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான சச்சின் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.சச்சின் டெஸ்ட் தொடரிலும் ,ஒருநாள் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.மேலும் கிரிக்கெட் உலகில் 100 சத்தங்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.இது போன்று சச்சின் சாதனை நீண்டு கொண்டே செல்லும்.

இந்நிலையில்  இந்திய வீரர் சச்சினுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது “ஹால் ஆஃப் ஃ பேம் ” என்ற கவுரவத்தை வழங்கி உள்ளது. இந்த கவுரவம் இந்திய சார்பில் சுனில் காவஸ்கர் (2009) , கபில் தேவ் (2009) ,பிஷன் சிங் (2009) , கும்ப்ளே (2015) , திராவிட் (2018)  ஆகியோர் பெற்று உள்ளனர்.

தற்போது அந்த வரிசையில் ஆறாவது வீரராக சச்சின் இணைந்து உள்ளார்.சச்சின் உடன் சேர்ந்து தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொணால்ட் மற்றும் ஆஸ்திரேலிய  மகளிர் அணியின் வீராங்கனை கேதரின் ஃ பிட்பாட்ரிக் ஆகியோர் தேர்ந்துதெடுக்கப்பட்டு உள்ளனர்.

author avatar
murugan