இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே… கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..

Google Pixel Fold 2 : ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் 2 மொபைல் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏனெனில், இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போகளில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றன.

Read More – புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

பிக்சல் ஃபோல்ட் 2 6.29-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவுடன் ஈர்க்கக்கூடிய 8.02-இன்ச் இன்னர் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கக்கூடும். இது தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியுள்ளது.   மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் கேம்-சேஞ்சராக Pixel Fold 2 இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பிக்சல் ஃபோல்ட் 2-இல் உள்ள டிஸ்ப்ளேவில் ரியல் எஸ்டேட் கணிசமான அதிகரித்து இருப்பதால், இதற்கு முன்பு வந்த பிக்சல் ஃபோல் ஒன் மொபைலுடன் ஒப்பிடும்போது அதில் பல்வேறு மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பிக்சல் ஃபோல்ட் 2 டிஸ்ப்ளே குறித்து வெளியான வதந்திகள் உண்மையாக இருந்தால், அது பயனர்களுக்கு அதிவேக மற்றும் விரிவான ஒரு சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும்.

Read More – இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..

இது அதிநவீன தொழில்நுட்பத்தை விம்புபவர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும். ஆதாரங்களின்படி, பிக்சல் ஃபோல்ட் 2 இன் டிஸ்ப்ளேக்களின் உற்பத்தி ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் மே 14 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அதன் வருடாந்திர Google I/O நிகழ்வில் Google Pixel Fold 2-ஐ வெளியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மடிக்கக்கூடிய சாதனம் புதுப்பிக்கப்பட்ட பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பிக்சல் ஃபோல்ட் 2 புதிய டென்சர் ஜி4 சிப் மூலம் இயக்கப்படலாம். இதுபோன்று Pixel Fold 2 ஆனது பிக்சல் 8a மற்றும் ஆண்ட்ராய்டு 15 மென்பொருள் அப்டேட் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More – இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

எனவே, பிக்சல் ஃபோல்ட் 2  அறிமுகம் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள், தொழில்நுட்பம் என பல்வேறு விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ள பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் அனைவரது பார்வையும் Google Pixel Fold 2 மீதுதான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் Pixel Fold 2 இன் வெளியீடு, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment