இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

Sora AI : ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (CTO) மிரா முராட்டி தெரிவித்துள்ளார். இந்த நவீன உலகத்தில் AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம், அதன் ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Read More – AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய காட்சிகள்… 

அந்தவகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OpenAI நிறுவனத்தின் டெக்ஸ்ட்-டு-வீடியோ ஜெனரேஷன் கருவியான Sora AI-ஐ கடந்த மாதம் அதன் தலைமை அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேன் உலகளவில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த Sora AI தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. இதுதொடர்பான 60 வினாடி வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.

Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

இதனால் Sora AI தொழில்நுட்பம் தான் தற்போது உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. அற்புதமான திறன்களைக் கொண்ட இந்த Sora AI டூல், text prompts மூலம் வீடியோக்களை உருவாக்கும் திறன் இருப்பதால் சமூக ஊடக பயனர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால், சோரா ஏஐ கருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், OpenAI நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிரா முராட்டி கூறியதாவது, Sora AI-ஐ மேலும் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தி ஒரு சிறப்பான விடியோ உடன் ஆடியோவையும் வழங்கும் வகையில் கொண்டுவந்துள்ளோம். இதுபோன்று எளிமையான text prompts மூலம் ஒரு அற்புதமான வீடியோக்களை விரைவாக உருவாக்கும் திறனையும் மேம்படுத்தியுள்ளோம்.

Read More – இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்…

விசுவல் கலைஞர்கள், டிசைனர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களுக்கு மட்டுமே தற்போது Sora AI-ஐ பயன்படுத்த முடியும். எனவே, இந்த ஆண்டு Sora AI டூல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தினார்.

மேலும், ஓபன் ஏஐ, தனியுரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், பொது பிரபலங்கள் குறித்த விடியோக்களை உருவாக்காது எனவும் கூறிய அவர், பயனர்கள் கொடுக்கும் தரவுகள் மூலம் உருவாகும் வீடியோ, ஏஐ உருவாக்கிய வீடியோ என்பதை குறிக்கும் வகையில் வாட்டர்மார்க் பதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment