#INDvsSA:இன்று 4-வது டி-20 போட்டி- தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியை தொடருமா இந்தியா?..!

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். அந்தவகையில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது.இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து,இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே டி20 தொடரின் 3-வது போட்டி சில தினங்களுக்கு முன்னர் விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி,20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு  179 ரன்கள் எடுத்தது.இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால்,48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில்,இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.இப்போட்டியில்  தோற்றால் தொடரை இழந்து விட நேரிடும் என்பதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது வெற்றியை இந்தியா தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாத்தியமான இந்தியா லெவன்:ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர்,ரிஷப் பந்த் (கேப்டன்,வி.கீப்பர்),ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்,அக்சர் படேல்,ஹர்ஷல் படேல்,புவனேஷ்வர் குமார், அவேஷ் கான்,யுஸ்வேந்திர சாஹல்.

சாத்தியமான தென்னாப்பிரிக்கா XI:டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக்,டுவைன் பிரிட்டோரியஸ்,ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் (வி.கீப்பர்),டேவிட் மில்லர்,வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா,கேசவ் மஹாராஜ்,அன்ரிச் நார்ட்ஜே,தப்ரைஸ் ஷம்சி.

Leave a Comment