#Breaking: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த மசோதா நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதனால் அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.அசாமில் உள்ள 10-த்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சி.