20 பேரை வேட்டையாடிய சிறுத்தையை சுட்டுக்கொன்ற வனத்துறை..!

  • குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20 பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினரால் சுட்டுக்கொலை.
  • மனிதர்களை கொன்று ரத்த ருசி கண்ட சிறுத்தை.

குஜராத் மாநிலம் அமரேலி அருகே கடந்த சில மாதங்களாக ஆடு, மாடுகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை அங்கிருந்த கிராமவாசிகள் மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட அச்சம் கொண்டிருந்தனர். மற்றும் 20 பேரை கடித்து குதறி ரத்த ருசி கண்டது. அதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

இந்நிலையில், அதே பகுதியில் மாட்டுத் தொழுவம் அருகே யூகலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கியிருந்ததை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயன்ற வனத்துறையினர், இரவு நேரமாக இருந்ததால் சிறுத்தையை சுட்டுக் கொன்றனர். அப்பகுதியில் நடமாடிய சிறுத்தைகள் சிலவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்