,

இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்… விவரம் இதோ ..!

By

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் டப்பு உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் மோதவுள்ளது.  இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோஹித் , ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சாதனை படைக்கவுள்ளனர்.

   
   

இந்தியாவின் வரலாறு சாதனை:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், மூன்றாவது உலகக் கோப்பையை கைப்பற்றுவார்கள். இதையடுத்து, ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். 2011-ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை இந்தியா தோற்கடித்து  சொந்த மண்ணில் முதல்  உலகக்கோப்பையை கைப்பற்றியது.

ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த சாதனையை ஏற்கனவே முறியடித்த விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவரது சாதனையை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. கோலி பத்து போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 5 அரை சதங்கள் உட்பட 711 ரன்களை குவித்துள்ளார்.

ரோஹித் சொந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு:

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பை தொடரில்  550 ரன்களை எடுத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேலும் 99 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது சொந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 2019 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா 648 ரன்கள் குவித்து இருந்தார்.

உலகக்கோப்பை அதிக விக்கெட் : 

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உலகக்கோப்பைகளில் மொத்தம் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால்  மிட்செல் ஸ்டார்க்  சாதனை முறியடிக்க முடியும். உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். இவர் 58 விக்கெட்டுகளை வீழ்த்திஉள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை: 

ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி 526 ரன்கள் எடுத்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் 24 ரன்கள் எடுத்தால்  உலகக்கோப்பையில் இந்திய அணியில்  550 ரன்களுக்கு மேல் குவித்த நான்காவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார்.

இதற்கு முன் இந்த பட்டியலில்  ரோஹித், விராட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023