அரபிக்கடலில் உருவான "க்யார் புயல்" இந்திய வானிலை மையம்..! மழை பெய்ய வாய்ப்பு..!

சில நாள்களாக அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதனால் லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் தாழ்வு மண்டலம் புயலாக  மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம்  கூறியுள்ளது. மேலும் இந்த புயலுக்கு க்யார் என்ற பெயரிட்டுள்ளனர். இது மும்பையில் இருந்து 380 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் உள்ளது.
இது தொடர்ந்து ஓமனை நோக்கி நகரும் இதனால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இந்தப் புயல் அதி  தீவிர புயலாக மாறும் இதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

author avatar
murugan