தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதா இந்தியன் 2?! அதற்க்கு முக்கிய காரணம் இதுதானா?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் என பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படம் 2021 தமிழ் புத்தாண்டிற்கு படத்தை கொண்டுவர படக்குழு முயற்சி செய்கிறதாம். இப்படத்தில் ஷங்கர் முழுக்கதையையும் எழுதி இருந்தாலும், படத்தில் உலகநாயகனின் கருத்துக்களும் இருக்குமாம். இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் எப்படியும் ஷூட்டிங் ஆரம்பித்துவிடும் என கூறப்படுகிறது.

அதே 2021 மே மாதம்தான் தமிழக சட்டப்பேரவை தேர்தலும் வரவுள்ளது  குறிப்பிடத்தக்கது. அதனை கருத்தில் கொண்டுதான் படத்தை 2021 ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதா என யோசிக்க வைக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.