106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரை சமன் செய்த இந்தியா..!

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி உள்ளது.  நேற்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான  மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ்  வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  ஜெய்ஸ்வால், சுப்மன் கில்  இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே  சுப்மன் கில்  12 ரன்களிலும் , அடுத்து வந்த திலக் வர்மா டக் அவுட் ஆகி  விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.  இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.

பின்னர் வந்த ரிங்குசிங் வந்த வேகத்தில் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்க தொடக்க வீரர் சூரியகுமார் யாதவ் 56 பந்தில் சதம் விளாசி அடுத்த பந்தே வில்லியம்ஸ் பந்தில் கேட்ச் அவுட்டானார். சூரியகுமார் யாதவ் 8 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசினார்.  இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை  இழந்து 201 ரன்கள் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டையும்,  தப்ரைஸ் ஷம்சி,  நந்த்ரே பர்கர் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். 202 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  இந்திய அணியில் குல்தீப் 5 விக்கெட்டையும், ஜடேஜா 2 விக்கெட்டையும்,  அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.

இந்த போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 2.5 ஓவரில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார். அதே நேரத்தில் ஜடேஜா 3 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டை பறித்தார். மூன்று போட்டியில் கொண்டு t20 தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடர்: 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது. பின்னர் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பார்லில் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.

author avatar
murugan