தொடரும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் ! இந்திய வீரர் உயிரிழப்பு…

ஜம்முவில்   எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேராவில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார். ரஜோரி மாவட்டம் நவ்சேரா மற்றும் பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 1 மணி முதல் இன்று காலை வரை தாக்குதல் நீடித்தது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஜக்சிர் சிங் என்பவர் உயிரிழந்தார். இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

source: dinasuvadu.com

Leave a Comment