இந்தியா- நேபாளம் இடையே பைப் -லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா மற்றும் நேபாளம் இடையே பெட்ரோலிய பைப் -லைன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி மூலமாக கொண்டு கொண்டு செல்லப்பட்டு வந்தது.ஆனால் நாளடைவில் இந்த திட்டத்திற்கு செலவு அதிகமானது.

இதனையடுத்து இதற்கான செலவுகளை குறைப்பதற்கு ஏதுவாக கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் மூலமாக பெட்ரோல்  மற்றும் டீசலை கொண்டு செல்வதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டமானது பீகாரில் உள்ள மோட்டிகாரி(Motihari) பகுதியில் இருந்து நேபாளத்தின் அம்லகன்ச் (Amlekhgunj) வரை சுமார் 69 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருந்தது.

இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று  இந்திய பிரதமர் நரேந்திர மோடி பைப்-லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார். காணொளி காட்சி மூலமாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.மேலும் தெற்கு ஆசியாவில் இரு நாடுகளுக்கு இடையில் பைப் லைன் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.