இந்த சட்டம் நியுசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை – அன்புமணி ராமதாஸ்

2001-ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். 

நியுசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அந்த  வகையில்,இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியுசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்!’ என பதிவிட்டுளளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment