5G சேவை: 50 நகரங்களின் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு!

இந்தியாவில் 5G சேவைகள் தொடங்கப்பட்ட 50 நகரங்களின் பட்டியலை பகிர்ந்த மத்திய அரசாங்கம்.

அதன்படி, இந்தியாவில் 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும்.

மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் 5 சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் அக்.1 முதல் 5G சேவைகள் தொடங்கப்பட்டது. நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5G சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5G சேவையை வழங்குகிறது. மேலும், விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5G சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment