#BREAKING: இந்தியாவில் PUBG உட்பட 118 செயலிகளுக்கு தடை..!

இந்தியாவில் PUBG உட்பட  118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக  சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.

 இதைதொடர்ந்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், மேலும் 100-க்கும் சீனா செயலிகளுக்கு இந்தியா தடை விதிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் PUBG உட்பட  118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்  என புகார் எழுந்த நிலையில், PUBG செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் PUBG செயலியை 20 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan