அதிகரிக்கும் கொரோனா பரவல்….! சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு…! – யுபிஎஸ்சி

கொரோனா பரவல் காரணமாக ஜூன் 27-ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை அடுத்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில், தமிநாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஜூன் 27-ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் என்றும் யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.