அதிகரிக்கும் கொரோனா தொற்று…! ஏப்ரல் 26-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்…! – பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்புகளும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருவதையடுத்து, ஏப்ரல் 26-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இக்கூட்டமானது ஆன்லைன் மூலம் காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். கேரளாவில் இதுவரை 13.22 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.