இமயமலை உச்சியில் தடம் பதித்த கொரோனா…! அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

இமய மலை உச்சியிலும் கொரோனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் தினசரி பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்த நிலையில், உயிரிழப்புகளும் இரண்டாயிரத்துக்கும் மேல் காணப்படுகிறது. இந்நிலையில் நேபாளத்தை சேர்ந்த வீரர்கள் இமயமலையில் ஏறியுள்ளனர். அப்பொழுது ஒரு வீரருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலமாக அந்த வீரரை நேபாளம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது அவருக்கு பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் இருந்த மற்ற வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமய மலை உச்சியிலும் கொரோனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.