அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு;கேரளாவில் இன்றும்,நாளையும் முழு ஊரடங்கு ….!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன்பின்னர், கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பஸ், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்,கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது.
மேலும்,மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.எனினும், ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பில் கேரளா தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.மேலும்,கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.