ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை…!

ஹிமாச்சல பிரதேசத்தில் கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுக்கு தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு, மருத்துவ பணியாளர்கள், படுக்கைகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களை, கொரோனா பணிகளில் ஈடுபடுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 4 மற்றும் 5 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் நர்சிங் மாணவர்கள் 2021 ஜூன் 30 வரை கொரோனா பணிகளில் ஈடுபடுவார்கள் என்று இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அறிவித்துள்ளது.

மேலும், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்களுக்கு மாதத்திற்கு ரூ .3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். நர்சிங் மாணவர்கள், ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைஃபிரி (ஜி.என்.எம்) மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஒப்பந்த ஆய்வக ஊழியர்களுக்கு ரூ. 1,500 என்று ஹிமாச்சல் அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.