தூத்துக்குடியில் சோகம்…அக்கா கண்முன்னே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த தங்கை-தந்தை.!

கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்.

மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரில் வெள்ளத்தில் சிக்கி அப்பா, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பொன்முடி சிறை செல்ல தேவையில்லை… நீதிபதி உத்தரவு.!

வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இடுப்பு அளவு தண்ணீர் சூழந்துள்ளது. இந்த நிலையில், அமணன் என்பவரும் அவரது இரண்டு மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஒரு கட்டத்தில் நிலை தடுமாறி இளைய மகள் கீழே விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்ல, அதனை பார்த்து மகளை பிடிக்க சென்ற தந்தையும் தண்ணீர் அடித்து செல்லப்பட்டார்.

பின்னர், மூத்த மகள் தந்து தங்கை தலைமுடி பிடித்து கொண்டதாகவும், வெள்ளம் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் காப்பாற்ற முடியாமல், மூத்த மகள் கண்முன்னே தங்கை – தந்தை உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.