இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 260 பேர் இறப்பு;26,032 பேர் குணமடைவு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,52,745 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,36,52,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,46,918 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,032 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,02,351 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,03,476 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 85,60,81,527 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 68,42,786 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.