தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சியாக தான் இருக்கும்-பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சியாக தான் இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே அண்மையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் அதிமுக உடனான கூட்டணி குறித்த கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் .

மேலும் அவர் கூறுகையில்,6 மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். பாஜக கைக்காட்டும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரும். பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார். 

இந்நிலையில் கோவில்பட்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், வருகின்ற  சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை தழுவி தமிழகத்தில் அங்கம் வகிக்கக்கூடிய அரசாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.