#BIGBREAKING : பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

9 முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும்  இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.பின்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து  கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

11 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

5 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

5 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago