டீசல் இல்லாத 108 ஆம்புலன்ஸ்.. உறவினர்கள் தள்ளிச் சென்ற அவலம்.! நோயாளி உயிரிழப்பு.!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில், தனப்பூர் எனும் பகுதியை சேர்ந்தவர் தேஜ்யா. 40 வயதான இவர்திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் இவரை தனப்பூர் மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியில் பாதியில் டீசல் இன்றி ஆம்புலன்ஸ் நின்றுவிட்டது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸை தள்ளிக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமகாக தேஜ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். ஆம்புலன்ஸ் வாகனம் டீசல் இல்லாமல் நின்ற விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

இது நிர்வாக கோளாறு. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் அமைச்சர் பி.எஸ்.கச்சாவாரியாவாஸ் தெரிவித்துள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment