தங்கலான் எப்போது ரிலீஸ்? மனம் திறந்த தயாரிப்பாளர்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.  இந்த திரைப்படத்தை  பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்போது படத்தின் இறுதி கட்டப் பணிகளில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த திரைப்படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 

ஆனால் படத்தின் சிஜி வேலைகள் முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச் செல்வதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து இந்த திரைப்படம் எப்போதுதான் வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தங்கலான்  திரைப்படம் முழுவதுமாக முடிந்து விட்டது. தற்போது  நடைபெற்று வருகிறது தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நடந்து முடிந்த பிறகு படத்தின் அறிவிப்பு வெளியாகும் படத்தை நம்பி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார் . கண்டிப்பாக தங்கலான்  திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்”  எனவும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment