1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. 

சைரன் 

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 1000 திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

விமர்சனம் 

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் விமர்சன ரீதியாக பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதை தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படம் மிகவும் எமோஷனலாக இருப்பதால் படத்தினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!!

சைரன் வசூல்

சைரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சைரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 1.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான  அகிலன் மற்றும் இறைவன் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

அந்த திரைப்படங்களை விமர்சன ரீதியாக சைரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த சைரன் திரைப்படம் அவருக்கு கம்பேக் திரைப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment