11 நிமிடத்தில்..10,000 டிக்கெட்டுகள் காலி.! வெளிநாட்டில் மரண மாஸ் காட்டும் இசைப்புயல் A.R.ரகுமான்.!

மலேசியாவில் நடக்கவுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான 10000 டிக்கெட்டுகள் 11 நிமிடத்தில் விற்பனை. 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் பல வருடங்களாக இசையமைத்து வருகிறார். சூப்பரான பாடல்கள், தரமான பின்னணி இசையும் கொடுத்துவரும் இவரது இசை ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது.  ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, கோப்ரா ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அவருடைய பின்னணி இசை படங்களுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ar rahman

அடுத்தாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு மலேஷியாவின் கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். டிஎம்ஒய் கிரியேசன் என்ற நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ARRahman first ever Live concert in Malaysia

அதன்படி, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28ம் தேதி இந்த இசை நிகழ்ச்கை மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதுவரை இல்லாத விதமாக மிகவும் புதுமையான முறையில் 10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து வெளியிட்டனர்.

ARRahman first ever Live concert in Malaysia

இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் என்பதால் சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்’ அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாகவும் வெளியீடபட்டிருந்தது. இதனையடுத்து  மலேசியாவில் நடக்கவுள்ள ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கான 10,000 டிக்கெட்டுகள் 11 நிமிடத்தில் விற்பனையாகி மேலு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment